மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பட்டமளிப்பு விழா.

Published Date: September 11, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரை நாடார் மஹாஜன சங்கம் ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது . முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் சுந்தர் தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில் இளைய தலைமுறையினர் தம் சொந்த உழைப்பில் உலக அளவில் முன்னேற வேண்டும். அவர்கள் நாட்டையும், சமுதாயத்தையும் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல உறுதியேற்க வேண்டும் என்றார்.

விழாவில் இளநிலை, முதுநிலை பட்டப் பிரிவுகளில் 905 பேர் பட்டம் பெற்றனர். முன்னதாக கல்லூரியில் நவீன மயமாக்கப்பட்ட கணினி அறிவியல் துறை ஆய்வகத்தை அமைச்சரும், நவீன மயமாக்கப்பட்ட வேதியல் துறை ஆய்வகத்தை திண்டுக்கல் சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் முருகேசனும், நிர்வாகிகள் அறையை விருதுநகர் இதயம் குழும தலைவர் முத்து, முதல்வர் அறையை விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி புரவலர் குறள் அரசன், புதிய சமையல் கூடத்தை ரமேஷ் ராஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

கல்லூரி துணைத் தலைவர் பொன்னுச்சாமி, பொருளாளர் நல்லதம்பி, நாடார் மஹாஜன சங்கப் பொதுசெயலாளர் கறிக்கோல்ராஜ், துணை முதல்வர் செல்வமலர், சுயநிதி பிரிவு இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

விழா ஒருங்கிணைப்பாளர் மாதவன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்

Media: Hindu Tamil